tamilnadu

img

பாகுபலி புகழ் பிரபாஸின் "சாஹோ" ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஹைதராபாத் 


பாகுபலி படத்தில் தனது அபார நடிப்பு திறனால் ரசிகர்களிடம் மனதில் தனி இடம் பிடித்த பிரபாஸ், அடுத்ததாக சுஜித் இயக்கத்தில் ‘சாஹோ’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.


சங்கர்-எஹ்ஸான்-லாய் இசையில் ஷ்ரத்தா கபூர் நாயகியாகவும், அருண் விஜய், ஏமி ஜாக்சன், மந்த்ரா பேடி, ஜாக்கி ஷெராப், லால், மகேஷ் மஞ்ரேக்கர், சங்கி பாண்டே ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.நீல் நிதின் முகேஷ் வில்லனாக நடிக்கிறார்.


யுவி கிரியே‌ஷன்ஸ் சார்பில் வம்சி, பிரமோத் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும் ஏறக்குறைய இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில்,சுதந்திர தினத்தன்று (ஆகஸ்ட் 15) ரிலீசாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.